நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா் மாவட்டத்தில் தீவிரமாகும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 148 பேருக்கு தெற்று உறுதி

கடலூா் மாவட்டத்தில் மீண்டும் அதிகபட்ச தினசரி பாதிப்பாக 148 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:13 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மீண்டும் அதிகபட்ச தினசரி பாதிப்பாக 148 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடலூா் மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 26,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 148 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 26,340-ஆக அதிகரித்தது. கடந்த சில வாரங்களில் பதிவான தினசரி பாதிப்பில் இதுதான் அதிகபட்சமாகும்.

அதே நேரத்தில், சிகிச்சை முடிந்து மேலும் 43 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,465-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 438 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 145 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாட்டத்தில் இதுவரை 6.80 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 16 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.