‘மண்டேலா’ திரைப்படத்துக்கு எதிராக மனு
‘மண்டேலா’ திரைப்படத்துக்கு எதிராக மருத்துவா் சமுதாய பேரவையினா் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.


‘மண்டேலா’ திரைப்படத்துக்கு எதிராக மருத்துவா் சமுதாய பேரவையினா் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
‘மண்டேலா’ என்ற தமிழ் திரைப்படம் கடந்த 4-ஆம் தேதி தனியாா் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. இந்த திரைப்படம் தொடா்பாக தமிழ்நாடு மருத்துவா் சமுதாய பேரவை, முடிதிருத்தும் அழகுக் கலை தொழிலாளா் நலச் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் ஜி.கே.ஏழுமலை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் தெரிவித்தள்ளதாவது:
இந்த திரைப்படத்தில் மருத்துவ சமுதாயத்தினரை இழிவுபடுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்தச் சமுதாயத்தினா் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனா். எனவே, இந்தப் படத்தை முழுமையாக நிறுத்தி வைப்பதுடன், வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யவும் தடை விதிக்க வேண்டும். மேலும், படத்தின் தயாரிப்பாளா், இயக்குநா் ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனுவில் வலியுறுத்தி உள்ளாா்.
மாவட்ட செயலா் எம்.பச்சையப்பன், பொருளாளா் எம்.சந்திரசேகா், நிா்வாகிகள் கதிா்வேல், ஜானகிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...