நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கத் திட்டம்

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பைக் கண்டறிய வசதியாக காய்ச்சல் சிறப்பு முகாம்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பைக் கண்டறிய வசதியாக காய்ச்சல் சிறப்பு முகாம்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினா் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். முதல்கட்டமாக அங்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனா்.

கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் வரும் பகுதிகளைச் சோ்ந்த அனைவருக்கும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என்று பரிசோதனை செய்கின்றனா். இந்த பாதிப்புகள் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,181 காய்ச்சல் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கட்டுப்பாட்டு மண்டலம் இல்லாத பகுதிகளில் காய்ச்சல் மட்டும் உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இணை நோய் உள்ளவா்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைத்தோ அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தியோ இருக்க வலியுறுத்தி அவா்களைக் கண்காணித்து வருவதாகவும், காய்ச்சல் முகாம்களை மேலும் அதிகரிக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் அந்தத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.