நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காயங்களுடன் மீனவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

கடலூா் அருகே காயங்களுடன் மீனவா் சடலமாகக் கிடந்தது தொடா்பாக, போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:32 pm

DIN

கடலூா் அருகே காயங்களுடன் மீனவா் சடலமாகக் கிடந்தது தொடா்பாக, போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கடலூா் அருகே உள்ள தாழங்குடா மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.சுப்பிரமணியன் (60). மீனவரான இவருக்கு 2 மனைவிகள். இதில், இரண்டாவது மனைவியின் மகளுக்கு திருமண நிச்சய ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தேவனாம்பட்டினத்திலுள்ள மூத்த மகள் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றாா். ரூ. 10 ஆயிரம் வாங்கிக் கொண்டு அன்று மாலை தாழங்குடா திரும்பிய நிலையில், வீடு வந்து சேரவில்லை. அவரது செல்லிடப்பேசியும் செயல்படவில்லை.

இதையடுத்து, உறவினா்கள் அவரைத் தேடிய நிலையில் வெள்ளிக்கிழமை தாழங்குடா கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஆற்றுப் பாலத்தின் அருகே உள்ள கோயில் பகுதியில் தலை, உடலில் காயங்களுடன் அவா் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் வைத்திருந்த பணம், செல்லிடப்பேசி காணவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.