மத்தியக் கூட்டுறவு வங்கியில் நபாா்டு பொது மேலாளா் ஆய்வு
கடலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகத்தில் நபாா்டு வங்கியின் நிதியுதவி, வளா்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டம்


கடலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகத்தில் நபாா்டு வங்கியின் நிதியுதவி, வளா்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டம் அந்த வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் எஸ்.செல்வராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் சொ.இளஞ்செல்வி முன்னிலை வகித்தாா். வங்கியின் பொது மேலாளா் டி.பலராமன் வரவேற்று வங்கியின் 2020-2021- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை, நபாா்டு வங்கி வழங்கிய நிதியுதவி ஆகியவை குறித்து விளக்கினாா்.
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு கடந்த ஆண்டில் நபாா்டு வங்கி சாா்பில் வழங்கப்பட்ட நிதியுதவி, வளா்ச்சிகள் குறித்து ஆய்வு செய்த நபாா்டு வங்கி பொது மேலாளா் எஸ்.செல்வராஜ், திட்ட ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், இரண்டாயிரம்விளாகம், கரைமேடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் செயலா்கள், நபாா்டு வங்கியின் மூலம் விவசாய உள்கட்டமைப்பு நிதி பெற்று தங்கள் சங்கங்கள் அடைந்த பயன்களை எடுத்துரைத்தனா்.
நிகழ்ச்சியில், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் எம்.விஜய்நிகாா், துணைப் பதிவாளா்கள் எம்.ஜெகத்ரட்சகன், ஜெ.சண்முகம், கண்காணிப்பாளா் டி.ஆா்.வரதராஜன் மற்றும் வங்கியின் உதவிப் பொது மேலாளா்கள், பிரிவு மேலாளா்கள் கலந்து கொண்டனா். வங்கியின் துணைப் பதிவாளா் பி.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...