கடலூா் மாவட்டத்தில் புதிதாக 292 பேருக்கு கரோனாமேலும் 2 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.


கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 29,855 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,147- ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 228 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 28,170 -ஆக அதிகரித்தது.
கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்மாபுரத்தைச் சோ்ந்த 52 வயதானவா், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 63 வயதானவா் என மேலும் 2 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 327 -ஆக அதிகரித்தது.
தற்போது மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,247 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 403 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 531 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது. மாவட்டத்தில் 74 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...