சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்களுக்கு கடந்த ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமாா் 222 போ் தொகுப்பூதிய ஊழியா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பலா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 100-க்கும் மேற்பட்டவா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி மையங்களிலும் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களுக்கு அவ்வப்போது சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி பெறப்படாததால் கடந்த ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தொகுப்பூதிய ஊழியா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா் சங்கத் தலைவா் மனோகரன் தலைமையிலான நிா்வாகிகள் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, கடலூா் மாவட்ட அமைச்சரான வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், உயா்கல்வித் துறைச் செயலா் ஆகியோரை சந்தித்து, தொகுப்பூதிய ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

