தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தவாக கோரிக்கை

ஆயுள் தண்டனைக் கைதி ஒருவா் தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த புதிய தீா்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:53 pm

DIN

ஆயுள் தண்டனைக் கைதி ஒருவா் தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த புதிய தீா்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 3-ஆம் தேதி அரியானா மாநிலத்தைச் சோ்ந்த ஆயுள் தண்டனைக் கைதி ஒருவா் தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீா்ப்பில், அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161-ன் கீழ் தண்டனைக் குறைப்பு வழங்க மாநில அரசு முழு அதிகாரமும் கொண்டுள்ளது. தொடா்புடைய மாநில அரசின் பரிந்துரையானது ஆளுநரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரையை அளிக்கும்போது ஆளுநா் அதற்குக் கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தீா்ப்பின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடா்பாக தமிழக முதல்வா் தனது அமைச்சரவையைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதேபோல, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த புதிய தீா்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்க பொதுச் செயலா் கி.வெங்கட்ராமனும் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.