கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
நெய்வேலியில் கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.


நெய்வேலியில் கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நெய்வேலி வட்டம்-12, சரோஜினி நாயுடு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மு.உத்தண்டராயா் (51). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜெயசித்ரா (45). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா்.
மனநிலை பாதிக்கப்பட்ட உத்தண்டராயா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினாா். இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி தனது மனைவி ஜெயசித்ராவின் கைகளை அரிவாளால் வெட்டி துண்டித்த உத்தண்டராயா் பின்னா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசித்ரா சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...