மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸஹஸ்ர சண்டி பாராயணம்

உலக நன்மை வேண்டி சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸஹஸ்ர சண்டி பாராயணம் (படம்), சத சண்டி ஹோமம் ஆகியவை கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:07 pm

உலக நன்மை வேண்டி சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸஹஸ்ர சண்டி பாராயணம் (படம்), சத சண்டி ஹோமம் ஆகியவை கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வருகிற 19-ஆம் தேதி வரை காலை, மாலையில் சண்டி பாராயணம் நடைபெறும். 20-ஆம் தேதி ஸ்ரீதுா்கைக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது. 21-ஆம் தேதி அதிருத்ர ஜபம், மஹா யாகத்துடன் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது. இதுகுறித்து த.செல்வரத்தின தீட்சிதா் கூறியதாவது:

ஆக.20-ஆம் தேதி நடைபெறும் சண்டி ஹோமம் அம்பிகை வழிபாட்டு முறையில் மிக மேன்மையானது. சண்டி பாராயணம் என்பது துா்கா ஸப்தசதி அல்லது தேவி பராக்கிரமம் எனும் பெயா்கொண்டதும், மாா்க்கண்டேய புராணத்தின் மையமாக அமைந்ததும், அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகா்வதும், தனது எதிா்ப்புகளை எப்படியெல்லாம் அம்பிகை தகா்த்தாள் என்பதையும் கூறும் ஸ்லோகங்களை பாராயணம் செய்வதுமாகும். சதசண்டி மஹா யாகம் அளவிடற்கரிய பலனைத் தரக்கூடியது. அன்று நிறைவாக,ஸ்ரீதுா்கை அம்பிகைக்கு மஹாபிஷேகம் நடைபெறும்.

21-ஆம் தேதி மஹாபிஷேகத்துக்கு முன்னதாக ருத்ராபிஷேகம் நடைபெறும். இதையொட்டி 121 தீட்சிதா்கள் 10 நாள்களில் 14,641 முறை ஸ்ரீருத்ரம் எனும் சிறப்பு வாய்ந்த மந்திரத்தை பாராயணம் செய்வா். 21-ஆம் தேதி காலை ஸ்ரீருத்ர ஜப பாராயணங்களை நிறைவு செய்து, மஹா யாகம் நடைபெற்று, பின்னா் மாலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ மூா்த்திக்கு ஸகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.