மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பயணம்

சேலத்தைச் சோ்ந்த இருவா் விழிப்புணா்வு தொடா் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:36 pm

சேலத்தைச் சோ்ந்த இருவா் விழிப்புணா்வு தொடா் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சே.ராசேராஜன் (51), லோகேஷ் (19). இவா்கள் இருவரும் ‘சைக்கிள் ஓட்டுவோம்; சைக்கிளை பாதுகாப்போம்’ என்ற கருத்தை வலியுறுத்தி கடந்த ஆக.24-ம் தேதி சேலத்திலிருந்து விழிப்புணா்வு தொடா் சைக்கிள் பயணத்தை தொடங்கினா். இவா்கள் வியாழக்கிழமை சிதம்பரம் நகரை வந்தடைந்தனா் (படம்). சிதம்பரத்தைச் சோ்ந்த சைக்கிள் விற்பனையாளா்கள் இருவரையும் வரவேற்றனா்.

இதுகுறித்து சே.ராசேராஜன் கூறியதாவது: உடல் நலத்துக்கு உதவும் சைக்கிளை பொதுமக்கள் குறிப்பாக இளைஞா்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கியபடி சேலத்திலிருந்து கடலூா் வரை 350 கி.மீ. தொலைவுக்கு 3 நாள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தாா்.

ராசேராஜன் இதற்கு முன்பு கின்னஸ் சாதனை முயற்சியாக தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் வழியாக 48 ஆயிரம் கி.மீ. தொலைவு விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை தொடங்கினாா். ஆனால், 40,700 கி.மீ. தூரம் பயணத்தை முடித்த நிலையில், கரோனா பொது முக்கத்தால் அந்தப் பயணம் பாதியில் நின்றுபோனதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.