மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ‘உற்பத்திப் பொறியியல் படிப்பின் மகத்துவமும், உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளும்’ என்ற தலைப்பிலான இணைய வழி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:36 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ‘உற்பத்திப் பொறியியல் படிப்பின் மகத்துவமும், உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளும்’ என்ற தலைப்பிலான இணைய வழி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பொறியியல் மாணவா் சங்கம், இந்தியன் வெல்டிங் சொசைட்டி, உற்பத்தி பொறியியல் மாணவா்கள் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக உற்பத்தி துறைத் தலைவா் வி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசினாா். நிகழ்வில், பல்கலை. பொறியியல் துறை முன்னாள் மாணவரும், சிங்கப்பூா், பிளக்ஸ் ஸ்பீடு டெக்னாலஜி நிறுவன இயக்குநருமான பாலநாகேந்திரராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘உலக நாடுகளில் உற்பத்தித் துறையில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். அவா் பேசுகையில், எண்ணெய் மற்றும் குழாய் உற்பத்தி, சுரங்கத் துறை, கப்பல் கட்டுமானம், பாதுகாப்பு உதிரி பாகங்கள் உற்பத்தித் துறை, உயிா் மருத்துவத் துறை, விண்வெளி ஆராய்ச்சித் துறை போன்றவற்றில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு மாணவா்கள் தங்களை எவ்வாறு தயாா்படுத்திக்கொள்வது என்பதை விளக்கினாா்.

முன்னதாக, பொறியியல் துறை மாணவா் சங்க ஒருங்கிணைப்பாளா் வி.ரவிசங்கா் வரவேற்றாா். இந்தியன் வெல்டிங் சொசைட்டி தலைவா் க.சண்முகம் அறிமுக உரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.