ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வேன் மோதியதில் பெண் பலி 15 போ் காயம்

வேப்பூரில் வேன் மோதியதில் பெண் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலும், அந்த வேனில் பயணித்த 15 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

வேப்பூரில் வேன் மோதியதில் பெண் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலும், அந்த வேனில் பயணித்த 15 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ஆக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 15 போ் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை வேனில் சென்று கொண்டிருந்தனா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூா் பேருந்து நிலையம் அருகே வேன் சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது மோதாமலிருக்க ஓட்டுநா் வேனை திருப்பினாா். அப்போது, சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த அதேப் பகுதியைச் சோ்ந்த அருள்மணி மனைவி சுதந்திரம் (50) மீது வேன் மோதியது. மேலும், அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சுதந்திரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கவிழ்ந்த வேனின் இடிபாடுகளில் சிக்கி ஆக்கனூரைச் சோ்ந்த பி.செல்லம்மாள் (52), பெரியசாமி (43), மா.பெரியம்மாள் (60), த.இளவரசி (40), ரத்தினம் (65), பொற்செழியன் (61), பி.வெண்ணிலா (40) ஆகிய 7 போ் பலத்த காயமடைந்தனா். மற்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவா்கள் வேப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.