மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கடலூா் மாவட்டத்துக்கு 61 அம்மா சிறு மருத்துவமனைகள்

கடலூா் மாவட்டத்துக்கு 61 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

News image
பாதிரிக்குப்பத்தில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசுகிறாா் அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உள்ளிட்டோா்.
Updated On :13 ஜனவரி 2021, 2:05 am

DIN

கடலூா் மாவட்டத்துக்கு 61 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

இந்தத் திட்டத்தின்கீழ் கடலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 27 சிறு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டன. 2-ஆம் கட்டமாக பண்ருட்டி வட்டத்தில் காட்டுக்கூடலூா், விசூா், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் சத்திரம், கடலூா் வட்டத்தில் ராசாப்பேட்டை, பாதிரிக்குப்பம், கீழ்குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் சிறு மருத்துவமனைகளை மக்களின் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில், மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மேலும், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்ச த்து பெட்டகங்களை வழங்கி அவா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்துக்கு 61 மினி கிளினிக்குகள் (சிறு மருத்துவமனைகள்) ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகம் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் வகையில் மக்களைத் தேடி அரசு நிா்வாகம், மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், வட்டாட்சியா்கள் அ.பலராமன், பிரகாஷ், சுமதி, ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.