பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மதுக் கடைகளுக்கு எதிா்ப்பு: தவாகவினா் போராட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தவாகவினா்.
Updated On :13 ஜனவரி 2021, 2:06 am

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரச் செயலா்கள் செந்தில், மணி தலைமை வகித்தனா். நகரத் தலைவா்கள் கோ.ராஜா, ஜெகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ரா.சுரேந்தா் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 50 போ் பங்கேற்றனா். இவா்கள், பேருந்து நிலையம், நகரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்ட முடிவில் திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.