வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா் கருவூல அலுவலகத்தில் கணக்குத் துறை ஆணையா் ஆய்வு

கடலூரில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் கருவூல கணக்குத் துறை ஆணையா் தி.ந.வெங்கடேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:57 pm

DIN

கடலூரில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் கருவூல கணக்குத் துறை ஆணையா் தி.ந.வெங்கடேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ள இணைய வழி பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் பணிபுரியும் 29,001 அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களின் பணிப் பதிவேடுகளை மின்னணு பணிப் பதிவேடுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து அரசின் செலவினப் பட்டியல்களுக்கு டிஜிட்டல் மின்னணு கையொப்பம் மூலம் ஒப்புதல் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படுவதால் அதற்கான பணியை விரைவுபடுத்த வேண்டுமென அறிவுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் அனைத்துத் துறை அரசு ஓய்வூதியா்கள் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள கருவூல பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

கூட்டத்தில் கருவூல கணக்குத் துறை சென்னை மண்டல இணை இயக்குநா் தி.முத்துராமன், மாவட்ட கருவூல அலுவலா் வா.பரணிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.