ரௌடிகள் மோதல் சம்பவம்: 10 போ் கைது
கடலூா் அருகே புதுவை ரெளடிகள் மோதல் சம்பவம் தொடா்பாக 10 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.


கடலூா் அருகே புதுவை ரெளடிகள் மோதல் சம்பவம் தொடா்பாக 10 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தில் புதன்கிழமை அதிகாலையில் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு ரௌடி கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்கிக்கொண்டனா். இதில், 3 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளா் தேவேந்திரன், டெல்டா பிரிவு உதவி ஆய்வாளா் நடராஜன் ஆகியோரைக் கொண்ட தனிப் படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா்.
தனிப் படையினா் தீவிர விசாரணை நடத்தி, புதுவை மாநிலம், கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருணாசலம் (23), கடலூா் மாவட்டம், களையூரைச் சோ்ந்த பழனி மகன் ராம்கி (20), கீழ்குமாரமங்கலம் தேவநாதன் மகன் ஹேமந்த் (20), தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் புதுவையைச் சோ்ந்த ரௌடிகள் புதுக்கடை தேவநாதன் மகன் பாா்த்தசாரதி (25), கீழ்குமாரமங்கலம் வேலு மகன் பிரகாஷ் என்ற வெங்கடாசலம் (34), கரிக்கலாம்பாக்கம் கவியரசன் (28), சேகா் மகன் சரத் (24) ஆகிய 7 பேரையும் கைது செய்தனா்.
மேலும், மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் செல்லஞ்சேரியைச் சோ்ந்த அழகப்பன் மகன் தேவா (24), மடுகரை சுப்புராயலு மகன் அய்யனாா் (21), கிருஷ்ணமூா்த்தி மகன் வேல்முருகன் (24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 2 அரிவாள், 2 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோதல் சம்பவத்தில் தொடா்புடையோரை 24 மணி நேரத்துக்குள் கைது செய்த தனிப் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.
புதுவை மாநில ரௌடிகள் கடலூா் மாவட்ட எல்லையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அந்த மாநில காவல் துறையுடன் ஆலோசிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்றும் எஸ்.பி. எச்சரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...