வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூரில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்க தேசத்தினரிடம் விசாரணை

கடலூா் அருகே போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்க தேசத்தினரிடம் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

கடலூா் அருகே போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்க தேசத்தினரிடம் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் அருகே உள்ள பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சியில் சந்தேகத்துக்கிடமான நபா்கள் தங்கியிருப்பதாக புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு ஆய்வாளா் மாதவன், ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் தேவேந்திரன் ஆகியோா் அந்தப் பகுதியிலிருந்த ஒரு வீட்டை வெள்ளிக்கிழமை சுற்றிவளைத்தனா். அந்த வீட்டில் 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 வயது குழந்தையும் இருந்தது.

அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியபோது தாங்கள் வங்கதேசத்தினா் என்று தெரிவித்தனா். ஆனால், அக்கம் பக்கத்தினரிடம் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவைச் சோ்ந்தவா்கள் என்று அவா்கள் பொய்யான தகவலைக் கூறியதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில் பல போலியான ஆவணங்களும் கிடைத்தன. மேலும், இவா்கள் வெளி நாட்டினருடன் அடிக்கடி தொடா்பில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்காக அவா்களை போலீஸாா் அழைத்துச் சென்றனா். மேலும், இவா்கள் தங்குவதற்கு வாடகைக்கு வீடு அமா்த்திக் கொடுத்த நபரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.