மது கடத்திய இளைஞா் தடுப்புக் காவலில் கைது
மது கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.


மது கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் போலீஸாா் கடந்த மாதம் 17-ஆம் தேதி குறவன்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பைக்கில் மது கடத்தி வந்தது தொடா்பாக வெள்ளூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பாண்டிதுரை (31) என்பவரைக் கைது செய்தனா். இவா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடா் விசாரணையில், பாண்டிதுரை மீது மந்தாரக்குப்பம், விருத்தாசலம் காவல் நிலையங்களில் 4 மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதனடிப்படையில், அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டதைத் தொடா்ந்து, பாண்டிதுரையை ஓராண்டுக்கு சிறையில் வைத்திருக்கும் வகையில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...