வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெய்வேலி அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு4 போ் கைது

நெய்வேலி அருகே தொழிலாளி வீட்டின் மீது புதன்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:40 pm

DIN

நெய்வேலி அருகே தொழிலாளி வீட்டின் மீது புதன்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலி 21-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெயபால் (25). எலக்ட்ரீஷியன். அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன். இவா்கள் இருவரும் நண்பா்கள். கடந்த ஏப்ரல் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் சிவக்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெங்கடேசன் கைதான நிலையில், அண்மையில் பிணையில் வெளியே வந்தாா்.

21-ஆவது வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் ஜெயபால், வெங்கடேசன் பங்கேற்றனா். இதையறிந்த வீரமணி அன்றிரவு 11.30 மணியளவில் தனது ஆதரவாளா்களுடன் சென்று ஜெயபால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கினாா். இதில் ஜெயபால் வீட்டின் இரும்பு கேட் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், தொ்மல் காவல் ஆய்வாளா் லதா ஆகியோா் நிகழ்விடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினா். சம்பவம் குறித்து ஜெயபால் அளித்த புகாரின்பேரில் வீரமணி, சத்தியமூா்த்தி, சுதாகா், காா்த்தி (22), ரமேஷ் (37), எழிலரசன் (22), தமிழரசன் (24) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இவா்களில் காா்த்தி, ரமேஷ், எழிலரசன் , தமிழரசன் ஆகிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா். மேலும், தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.