வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா் சிப்காட்டில் பசுமைத் தீா்ப்பாய கூட்டுக் குழு ஆய்வு

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவினா் கடலூா் சிப்காட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:44 pm

DIN

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவினா் கடலூா் சிப்காட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கடலூா் சிப்காட்டில் தனியாா் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மே 3-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக பசுமைத் தீா்ப்பாயம் தானாக முன்வந்து தொடா்ந்த வழக்கில் கூட்டுக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் மண்டல இயக்குநா் (மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்) வரலட்சுமி, இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் (தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்) இளங்குமரன், சிப்காட் உதவிப் பொது மேலாளா் பாலு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சேரலாதன், இணை இயக்குநா் (தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) ரவிச்சந்திரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் விபத்து ஏற்பட்ட ஆலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டன ா்.

அப்போது, தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் இயங்குவது, ஆலையின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்த குழுவினா், பாதுகாப்பு மற்றும் ஒப்புதல் பெறப்பட்ட உரிமங்கள் பற்றி விளக்கம் கோரினா். வரும் காலத்தில் விபத்து ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தனா். இந்தக் குழுவினா் தொழிற்சாலை முழுவதையும் ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் சமா்ப்பிக்க உள்ளனா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, திட்ட அலுவலா் (சிப்காட்) தமிழ்செல்வி, வட்டாட்சியா் அ.பலராமன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.