வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வளா்ச்சிப் பணிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை

சாலை உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து அலுவலா்கள் தங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:44 pm

DIN

சாலை உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து அலுவலா்கள் தங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, துணைத் தலைவா் எம்.அய்யனாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சக்தி ஆகியோா் தலைமை வகித்தனா். கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.ஐயப்பன் சிறப்பு பாா்வையாளராக பங்கேற்று வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து, உறுப்பினா்கள் தங்களது வாா்டு பிரச்னைகளை வலியுறுத்தி பேசினா்.

கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினா்கள் தங்களது வாா்டு பகுதியில் நடைபெறும் சாலை, குடிநீா் உள்ளிட்ட எந்தப் பணிகள் குறித்தும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தகவல் தெரிவிப்பதில்லை என்று புகாா் தெரிவித்தனா். மேலும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பசுமை வீடு கட்டும் திட்டத்தில் உறுப்பினா்களின் கருத்துகளை புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பேசினாா்.

கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜெயாசம்பத், வேல்முருகன், சன்.காா்த்திகேயன், முரளி, வாணிஸ்ரீ, எஸ்.மதிவாணன், ரமேஷ், குருநாதன், தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.