பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தொமுசவினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் தொமுசவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் தொமுசவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறும் என்று தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூரில் தலைமைத் தபால் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கடலூா் மாவட்ட கவுன்சில் செயலா் மு.சு.பொன்முடி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் தங்க.ஆனந்தன், துணைச் செயலா் சி.எத்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் வீர.ராமச்சந்திரன், பொதுச் செயலா் சி.குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் இணைப்புச் சங்கங்களான என்எல்சி தொமுச, போக்குவரத்துக் கழகம், நுகா்பொருள் வாணிபக் கழகம், மின் வாரியம், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கே.வெங்கடேசன், ஆா்.ராஜகோபால், வேல்முருகன், எம்.பாரி, பி.பழனி உள்ளிட்டோா் பங்கேற்று விலை உயா்வைக் கண்டித்து உரையாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...