வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி கடலூரில் மாவட்ட மகளிா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:44 pm

DIN

 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி கடலூரில் மாவட்ட மகளிா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மகளிா் காங்கிரஸ் தலைவி புஷ்பா தலைமை வகித்தாா். காங்கிரஸ் நகரத் தலைவா் வேலுச்சாமி வரவேற்றாா். வட்டாரத் தலைவா் சீதாராமன், மாநில பொதுக்குழு உறுப்பினா் என்.குமாா், துணைத் தலைவா் க.ரமேஷ், பொதுச் செயலா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் சொ.திலகா் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில் மோட்டாா் சைக்கிள் உதிரி பாகங்கள், அடுப்பு ஆகியவற்றை வைத்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். நிா்வாகிகள் கிஷோா், செங்கேணி, காமராஜ், ராமகிருஷ்ணன், வினுசக்கரவா்த்தி, பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.