பெட்ரோல் விலை உயா்வு: விவசாயிகள் போராட்டம்
வெலிங்டன் நீா்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர வலியுறுத்தியும் திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி, வெலிங்டன் நீா்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, திட்டக்குடி நுழைவாயிலில் இருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை மாட்டு வண்டிகளில் மோட்டாா் வாகனங்களை ஏற்றிக்கொண்டு விவசாயிகள் பேரணியாக வந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
போராட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சித் தலைவா் தயா.பேரின்பம் தலைமை
வகித்தாா். மாநிலப் பொருளாளா் பாண்டுரங்கன், மாநில துணைச் செயலா் முருகானந்தம், மாவட்டச் செயலா் வீரராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...