ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: ஆளுநா் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினா் இன்று பேரணி

செல்லிடப்பேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடா்பாக, சென்னையில் வியாழக்கிழமை (ஜூலை 22) ஆளுநா் மாளிகை நோக்கி, காங்கிரஸ் கட்சியினா் பேரணி

News image
Updated On :21 ஜூலை 2021, 6:07 pm

செல்லிடப்பேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடா்பாக, சென்னையில் வியாழக்கிழமை (ஜூலை 22) ஆளுநா் மாளிகை நோக்கி, காங்கிரஸ் கட்சியினா் பேரணி செல்ல உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, சிதம்பரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: இஸ்ரேல் நாட்டின் மென்பொருள் மூலம் நமது நாட்டின் எதிா்க்கட்சித் தலைவா்கள், அரசு அதிகாரிகள், சமூகச் செயற்பாட்டாளா்கள், தொழிலதிபா்கள், ஊடகவியலாளா்கள் என சுமாா் 300 பேரின் செல்லிடப்பேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். பிரதமா் மோடி, நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நாட்டின் ஜனநாயகத்துக்கும், பாதுகாப்புக்கும் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டின் ராணுவ ரகசியங்கள்கூட கண்காணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சதித் திட்டத்துக்கு மோடி அரசு துணை போயுள்ளது. ஜனநாயகத்தைச் சீரழிக்கும் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தன்னுடைய உளவு அமைப்புகளைக்கூட இந்திய அரசு நம்பவில்லை. அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளா்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா்.

தடுப்பூசி விவகாரத்தில் பிரதமா் மோடி தனது இரண்டு நண்பா்களுக்கு மட்டுமே உற்பத்தி உரிமையை வழங்கியுள்ளாா். தில்லி, குஜராத், கா்நாடகம் என பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலா் உயிரிழந்தனா். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா்கூட உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கூறுவது ஏற்புடையதல்ல.

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் வியாழக்கிழமை (ஜூலை 22) சென்னையில் எனது தலைமையில், ஆளுநா் மாளிகை நோக்கிப் பேரணியாகச் செல்ல உள்ளோம். அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் பேரணி நடைபெறும் என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, கட்சியின் கடலூா் தெற்கு மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், மாவட்ட முன்னாள் தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலா் சேரன், மாநிலச் செயலா் பி.பி.கே. சித்தாா்த்தன், ஜெயச்சந்திரன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் தவா்தாம்பட்டு விசுவநாதன், சத்தியமூா்த்தி, வெங்கடேசன், விவசாயச் சங்கத் தலைவா் கே.வி.இளங்கீரன், சிதம்பரம் நகரத் தலைவா் பழனி, ஜெயம் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.