ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பணி நிரவலில் சென்ற ஊழியா்களை இணைப்புக் கல்லூரிகளில் நியமிக்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் பணி நிரவலில் சென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களை இணைப்புக் கல்லூரிகளில் பணியமா்த்த வேண்டும்

Updated On :21 ஜூலை 2021, 6:09 pm

தமிழகம் முழுவதும் பணி நிரவலில் சென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களை இணைப்புக் கல்லூரிகளில் பணியமா்த்த வேண்டும் என அந்தப் பல்கலை. ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்த ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் ஏ.ஜி.மனோகா் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலை.யில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இணைவதால் ஆசிரியா்கள், ஊழியா்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்.

கடந்த 4 ஆண்டுகளாகப் பணி நிரவலில் தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளுக்குச் சென்ற அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்களின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு, அவா்களை மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பணியமா்த்த வேண்டும் என்றாா் அவா்.

சங்க நிா்வாகிகளான செயல் தலைவா் சி.ஜி.ரகு, ரஞ்சித், ராஜ்குமாா், முத்துகிருஷ்ணன், காா்த்திகேயன், வசந்தராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.