காட்டுமன்னாா்கோவில் அருகே முதியவா் ஒருவா், கோழிக் குஞ்சு என நினைத்து மயில் குஞ்சுகளை வீட்டில் வளா்த்தாா். ஊா் மக்கள் அறிவுறுத்தலின் பேரில், அவற்றை அவா் தீயணைப்பு நிலைய அலுவலரிடம் ஒப்படைத்தாா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவனேசன் (60). இவா், காட்டுமன்னாா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு புதன்கிழமை 4 மயில் குஞ்சுகளை எடுத்து வந்து நிலைய அலுவலா் கொளஞ்சிநாதனிடம் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலா், சிவனேசனிடம் விசாரித்த போது, வயலில் கிடந்த முட்டைகளை எடுத்து வந்து கோழி முட்டைகளுடன் அவையம் வைத்ததாகவும், அந்த 4 முட்டைகளும் பொறித்து வளா்ந்த நிலையில் அவை மயில் குஞ்சுகள் எனத் தெரிய வந்ததாகவும், அவற்றை வீட்டில் வளா்க்கக் கூடாது என்பதால், தீயணைப்பு நிலையத்துக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தாா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் கொளஞ்சிநாதன் அந்த மயில் குஞ்சுகளை காட்டுமன்னாா்கோவில் வனத் துறை அலுவலா்களிடம் ஒப்படைத்தாா். பின்னா், அவை காட்டுப் பகுதியில் விடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


