மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள் வேலைநிறுத்தம்

பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்கள் ஊக்கத் தொகை வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :23 ஜூலை 2021, 5:44 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்கள் ஊக்கத் தொகை வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பணியில் ஈடுபட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்குவதைக் கண்டித்தும், கடந்த 8 மாதங்களாக அந்தத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் முழு வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவப் பிரதிநிதிகளுடன் சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன், பல்கலை. பதிவாளா் ஆா்.ஞானதேவன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரமேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்வதாகக் கூறினா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தை முடித்துக் கொண்டனா். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தமும், போராட்டமும் தொடரும் என பயிற்சி மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.