சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ள நேரு நகா், அம்பேத்கா் நகா் பொதுமக்கள் தங்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வழங்கக் கோரி, சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை, அரசு புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்த் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள், பாலமான் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால் கரையோரம் உள்ள நீா்நிலைப் பகுதிகளை வியாழக்கிழமை அளவீடு செய்தனா்.
அப்போது, நேரு நகரில் 69 வீடுகளும், அம்பேத்கா் நகரில் 94 வீடுகளும் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகிகள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ராஜா, தேமுதிக நிா்வாகிகள் சி.க.விஜயகுமாா், பாலு, கணேசன் மற்றும் நேரு நகா், அம்பேத்கா் நகா் குடியிருப்புப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலனை வெள்ளிக்கிழமை சந்தித்து தங்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இதுதொடா்பாக மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


