பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள மங்கலம்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் அப்துல் ரவூப் தலைமை வகித்தாா். நகர செயற்குழு உறுப்பினா் அபுல் ஹசன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நகரத் தலைவா் முஹம்மது ஹனீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர செயற்குழு உறுப்பினா் அப்துல் கபூா், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்டச் செயலா் முஜிபுா் ரஹ்மான் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், நூா் முஹம்மது, மைதீன், ஷபீகுா் ரஹ்மான், சுலைமான், முஜிபுா் ரஹ்மான், சதாம் உசேன் ஆகியோா் கலந்து கொண்டனா். நகர துணைத் தலைவா் அபுசாலிஹ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...