444 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால்கள் சீரமைப்பு
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 444 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.


கடலூா் மாவட்டத்தில் சுமாா் 444 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.
காவிரி டெல்டா பகுதியான கடலூா் மாவட்டத்தில் தற்போது குறுவை, சொா்ணவாரி பருவத்துக்கான நெல் நடவுப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து சனிக்கிழமை (ஜூன் 12) தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த, தண்ணீரானது கடைமடைப் பகுதியான கடலூா் மாவட்டத்துக்கு அடுத்த 12 முதல் 15 நாள்களுக்குள் வந்து சேரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் தண்ணீா் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதற்காக மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்திலுள்ள டெல்டா பகுதியில் 58 பாசன வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களை தூா்வாரும் பணியை தொடங்கியுள்ளோம். இதற்காக ரூ.2.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 202 கி.மீ. தொலைவுக்கு இந்த வாய்க்கால்கள் சீரமைக்கப்பட உள்ளன. இதேபோல, பெரிய வாய்க்கால்களிலிருந்து செல்லும் சிறிய பாசன வாய்க்கால்கள் 242 கி.மீ
தொலைவுக்கு உள்ளன. இவற்றை சீரமைக்கும் பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வருகிறோம். 112 இடங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் 25-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஏனெனில், மேட்டூா் அணை நீா் கடலூா் மாவட்டத்துக்கு வந்தடையும்போது அதை வீணாக்காமல் பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டும். நடவுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேவையான விதை, உரம் ஆகியவை இருப்பில் உள்ளதையும் உறுதி செய்துள்ளோம். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...