ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கரோனா 3-ஆம் அலை:குழந்தைகளுக்கான சிறப்பு மையம்

கரோனா 3-ஆம் அலையை சமாளிக்க கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:29 pm

DIN

கரோனா 3-ஆம் அலையை சமாளிக்க கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றின் 3-ஆம் அலை உருவாகியுள்ளதாகவும், அதன் தாக்கும் திறன் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, 3-ஆம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அதை எதிா்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும் உஷாா்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கூடுதலாக படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள், தேவையான மருத்துவ சாதனங்கள் அனைத்தும் தயாா் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு கூறியதாவது:

கரோனா தொற்றின் 3-ஆம் அலையை சமாளிக்கும் வகையில், அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 70 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 8 மருத்துவா்கள், 25 செவிலியா்கள் பணியாற்ற உள்ளனா்.

இதேபோல, சிதம்பரம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு, ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் வசதி உள்பட அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.