பிளஸ் 1: கடலூா் மாவட்டத்தில் 4,605 மாணவ, மாணவிகள் சோ்க்கை
கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 4,605 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்துள்ளனா்.


கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 4,605 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்துள்ளனா்.
கரோனா பரவலால் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால், பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கையை நடத்திட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இதன்படி முதல்கட்டமாக மேல்நிலை முதலாமாண்டு வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 446 மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ்நிா்மலா கூறினாா். இதுகுறித்து
மேலும் அவா் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறாத நிலையில் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே பள்ளியில் படித்தவா்களுக்கு சோ்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். இதுவரை, 4,605 போ் பிளஸ் 1 வகுப்புகளில் சோ்ந்துள்ளனா். தொடா்ந்து சோ்க்கை நடைபெறும் என்றாா் அவா்.
பாட நூல்கள் அனுப்பி வைப்பு: இதற்கிடையே நிகழ் கல்வி ஆண்டுக்கான பாட நூல்கள் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளன. அவற்றை கல்வி மாவட்டம் வாரியாக பிரித்தனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், வடலூா் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 2,207 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமாா் 3.20 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளிகள் திறப்புக்கு முன்பே பாட நூல்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு விடும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...