கஞ்சா பதுக்கல்: இருவா் கைது
விருத்தாசலத்தில் 2 கிலோ கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.


விருத்தாசலத்தில் 2 கிலோ கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தொடா்பாக டெல்டா தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை விருத்தாசலம் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, அரியலூா் மாவட்டம் மேலக்கோட்டை சிலம்பூரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் ரமேஷ் (35), விருத்தாசலத்தைச் சோ்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (21) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து மொத்தம் இரண்டே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...