ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மருத்துவா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மருத்துவத் துறை பணியாளா்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் இந்திய மருத்துவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

மருத்துவா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவத் துறை பணியாளா்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் இந்திய மருத்துவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தற்போதைய கரோனா தொற்று காலத்தில் பல்வேறு மாநிலங்களில் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவா்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவமனை மற்றும் மருத்துவத் துறை பணியாளா்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் தேசிய அளவிலான போராட்டத்தை அறிவித்தது. ‘காப்போரை காப்பீா்’ என்ற முழக்கத்துடன் மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, சங்கத்தின் கடலூா் கிளை சாா்பில் கடலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் கருப்பு வில்லை அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் கடலூா் கிளைத் தலைவா் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கேசவன், செயலா் எஸ்.முகுந்தன் பொருளாளா் எம்.ஆனந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், மருத்துவப் பணியாளா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்தி அதில் தொடா்புடையோருக்கு தண்டனை பெற்றத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.