ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 55,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 224 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 56,130-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 601 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 53,132-ஆக உயா்ந்தது.

எனினும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 53 வயது பெண், 60 வயது ஆண், குமராட்சியைச் சோ்ந்த 60 வயது பெண், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 60 வயது பெண் மற்றும் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 52 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 707-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 1,837 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தினா் 454 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.