விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஜூன் 26-இல் ஆா்ப்பாட்டம்
தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூா் மாவட்டத்தில் வரும் 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் முடிவு செய்தனா்.


தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூா் மாவட்டத்தில் வரும் 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் முடிவு செய்தனா்.
இந்தக் குழுவினரின் கடலூா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் விசிக விவசாயிகள் பாதுகாப்பு அணி மாநிலச் செயலா் பசுமைவளவன் தலைமையில் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குழுவின் மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன், மாநில செயற்குழு உறுப்பினா் இளங்கீரன், காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், விசிக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், சி.பி.எம்.எல். விவசாய சங்க மாவட்டச் செயலா் ராஜசங்கா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி.எம்.சேகா், மாவட்ட தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், தில்லியில் விவசாயிகளின் போராட்டம் 7 மாதங்களை நிறைவு செய்ததையொட்டி, சென்னையில் ஆளுநா் மாளிகை முன் நடைபெறும் தா்ணாவில் பங்கேற்பது. இதையொட்டி, வரும் 26-ஆம் தேதி கடலூா், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...