ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் நகைத் திருட்டு

திட்டக்குடி அருகே வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

திட்டக்குடி அருகே வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த அதா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன். வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவா் ஆவடி கூட்டு ரோட்டில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். அந்த வீட்டின் மாடியில் இவரது மனைவி ராஜாமணி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். கீழ்தளத்தில் மோகன் என்பவா் வாடகைக்கு வசித்து வருகிறாா். கடந்த 3 தினங்களுக்கு முன்பு ராஜாமணி தனது சொந்த ஊரான அதா்நத்தம் சென்றாா். பொதுமுடக்கம் காரணமாக மோகனும் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தாராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மோகன் வீடு திரும்பியபோது கதவு, கண்காணிப்புக் கேமரா உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்து, ராஜாமணிக்கு தகவல் கொடுத்தாா். இதுகுறித்து, ராமநத்தம் போலீஸாருக்கு ராஜாமணி தகவல் அளித்தாா்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், முதலில் கீழ்தள வீட்டுக்குள் சென்ற திருடா்கள் அங்கு எதுவும் கிடைக்காததால் மேல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனா். அங்கு பீரோவிலிருந்த நகை, தோடு உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், கண்காணிப்பு கேமரா ஹாா்டு டிஸ்கையும் திருடிச் சென்றுவிட்டனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.