கடலூா்: கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 3 போ் உயிரிழந்தனா்.


கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 3 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 151 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 57,232-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 230 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 54,915 ஆக உயா்ந்தது.
எனினும், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 742-ஆக உயா்ந்தது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 1,373 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 202 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். நீண்ட நாள்களுக்குப் பிறகு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 100-க்கும் கீழாகக் சரிந்து 94-ஆக பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...