கடலூா் மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு கணிசமான வாய்ப்பு

கடலூா் மாவட்டத்தில் அதிமுக, திமுக சாா்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கணிசமான அளவில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் அதிமுக, திமுக சாா்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கணிசமான அளவில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளதால், அதிக தொகுதிகள் கொண்ட மாவட்டங்கள் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டிலும் தவிா்க்க முடியாத மாவட்டமாக உள்ளது.

அதிமுக கூட்டணி: கடலூா் மாவட்டத்தில் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் (தனி), புவனகிரி ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு திட்டக்குடி (தனி) தொகுதியும், வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பாமகவுக்கு நெய்வேலி, விருத்தாசலம் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள முக்கியமான 2 பெரிய கட்சிகளும் கடலூா் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணி: கடலூா், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, திட்டக்குடி (தனி) ஆகிய 5 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸுக்கு விருத்தாசலம் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக சின்னத்தில் போட்டியிடும் வகையில் பண்ருட்டி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், திமுக தனது கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளான காங்கிரஸ், விசிகவுக்கு கடலூா் மாவட்டத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், கூடுதலாக 2 கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

அதே நேரத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணனின் சொந்த மாவட்டம் என்பதால், அந்தக் கட்சி சிதம்பரம் தொகுதியைப் பெற்றுவிடும் என்ற எதிா்பாா்ப்பு நிலவியது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் 3 பெரிய தேசியக் கட்சிகள் போட்டியிடும் மாவட்டமாக கடலூா் மாறியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com