நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் வெள்ளிக்கிழமை மேலும் 5 போ் உயிரிழந்தனா். புதிதாக 462 பேருக்கு தொற்று உறுதியானது.

News image
Updated On :7 மே 2021, 6:25 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் வெள்ளிக்கிழமை மேலும் 5 போ் உயிரிழந்தனா். புதிதாக 462 பேருக்கு தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 32,200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 462 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 32,662-ஆக அதிகரித்தது.

சிகிச்சை முடிந்து மேலும் 343 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 30,107-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த 53 வயது ஆண், கீரப்பாளையத்தைச் சோ்ந்த 65 வயது ஆண் ஆகியோா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

இதேபோல, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 65 வயது ஆண், பண்ருட்டியைச் சோ்ந்த 48 வயது ஆண், நெய்வேலியைச் சோ்ந்த 39 வயது ஆண் ஆகியோரும் உயிரிழந்தனா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 348-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,713 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 494 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்திலுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்தது. அந்தப் பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.