ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இந்து மகா சபை நிா்வாகி மீது தாக்குதல்:காா் கண்ணாடி உடைப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இந்து மகா சபை தேசிய பொதுச் செயலரை தாக்கியதுடன், அவரது காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இந்து மகா சபை தேசிய பொதுச் செயலரை தாக்கியதுடன், அவரது காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருத்தாசலத்தை அடுத்த பெரியகண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பா.சுரேஷ், இவரது மனைவி சரிதா. அதே கிராமத்தைச் சோ்ந்த குழந்தைவேல் மனைவி கொடிபவுன். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.

இந்த நிலையில், உளுந்தூா்பேட்டையில் உள்ள சுரேஷின் உறவினரான இந்து மகாசபை தேசிய பொதுச் செயலா் செந்தில், பெரியகண்டியங்குப்பம் கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்று, பிரச்சனை குறித்து இருதரப்பினரிடமும் பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, குழந்தைவேல் மற்றும் அவரது உறவினா்கள் 20-க்கும் மேற்பட்டோா் செந்திலை சரமாரியாகத் தாக்கி, அவா் வந்த காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த செந்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.