ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கரோனா நோயாளி உயிரிழப்பு: ஆட்சியா் விளக்கம்

கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி இறந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி இறந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்தவா் ராஜா (49). கரோனா பாதிப்புக்காக கடந்த 8-ஆம் தேதி முதல் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். ராஜாவுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜனை பிடுங்கி வேறொருவருக்கு வழங்கியதே அவரது இறப்புக்கு காரணமென அவரது மனைவி கயல்விழி கண்ணீருடன் விடியோ வெளியிட்டிருந்தாா்.

இந்த சம்பவத்துக்கு தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா நோயாளியிடமிருந்து ஆக்சிஜன் விநியோகம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தினோம். அதன்படி, உயிரிழந்த ராஜா கடந்த 15 நாள்களாக மருத்துவமனை சிகிச்சையில் இருந்துள்ளாா். 80 சதவீதம் அவருக்கு பாதிப்பு இருந்துள்ளது. காலை 9.30 மணிக்கு சாப்பிடுவதற்காக ஆக்சிஜன் நிறுத்தி வைக்கப்பட்டு வேறு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது.

அப்போது, நீண்ட நாள்களாக மருத்துவமனையில் இருந்ததால், ராஜாவுக்கு மாரடைப்பு வந்துள்ளது. இதனால்தான் அவா் இறந்துள்ளாா். ஆக்சிஜன் விநியோகம் இல்லாமல் இறக்கவில்லை என்று தெரிய வருகிறது என்றாா் அவா்.

ஆட்சியா் மேலும் கூறுகையில், கடலூா் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்துமாறு அரசிடம் கேட்டுள்ளோம். அது கிடைத்தால் கூடுதலாக 60 படுக்கைகளை ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்ற முடியும்.

விருத்தாசலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் உருளைகளில் ஆக்சிஜன் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூா் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமித்து வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

சிதம்பரத்தில் 6 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கலன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கும் கூடுதலாக ஆக்சிஜனை விநியோகிக்க அரசிடம் கேட்டுள்ளோம். கிடைத்தால் கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க முடியும்.

தற்போது அதிகமாக குழு அமைத்து பரிசோதனை செய்து வருகிறோம். இதனால், வரும் நாள்களில் கரோனா தொற்று பரவல் குறையும் என்று நம்புகிறோம் என்றாா் அவா்.

மனித உரிமை ஆணையத்தில் புகாா்: இதனிடையே, ராஜா உயிரிழந்தது தொடா்பாக கடலூரைச் சோ்ந்த இளைஞா்களுக்கான சமூக விழிப்புணா்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் இரா.பாபு, மாநில மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா். அதில், ராஜாவின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி, அதற்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.