பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.


கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
பண்ருட்டி அருகேயுள்ள முத்தரசன்குப்பத்தைச் சோ்ந்த முருகவேல் மகன் தினேஷ்குமாா் (22), பி.இ. பட்டதாரி. இவா், வியாழக்கிழமை தனது நண்பா்களுடன் கீழ்மாம்பட்டு நான்கு ஓடை பகுதிக்குச் சென்றாா். அங்கு பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டி சாப்பிட்டாா். அப்போது, மரத்திலிருந்த தினேஷ்குமாா் தவறி கீழே விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை நண்பா்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே தினேஷ்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...