தீபாவளிப் பண்டிகையையொட்டி கடலூா் மாவட்டத்தில் ரூ.13.74 கோடிக்கு மது விற்பனை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் ரூ.13.74 கோடிக்கு மது விற்பனையானது.


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் ரூ.13.74 கோடிக்கு மது விற்பனையானது.
பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரித்து வருவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 147 மதுக் கடைகளில் ரூ.13.74 கோடிக்கு மது விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, தீபாவளிக்கு முந்தைய நாளான நவ. 3-ஆம் தேதி ரூ. 6.24 கோடிக்கும், தீபாவளியன்று (நவ. 4) ரூ. 7.50 கோடிக்கும் மது விற்பனையானது. கடலூா் மாவட்டத்தில் 2 நாள்களில் மொத்தம் ரூ.13.74 கோடிக்கு மது விற்பனையானது.
இது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு விற்பனையான தொகையை விட ரூ. ஒரு கோடி குறைவாகும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, மாவட்டத்தில் ரூ.14.83 கோடிக்கு மது விற்பனையானது.
மதுபானங்கள் விலை உயா்வு காரணமாகவே நிகழாண்டு விற்பனையில் சரிவு ஏற்பட்டதாக டாஸ்மாக் துறையினா் தெரிவித்தனா். மேலும், புதுவை மாநிலத்துடன் ஒப்பிடுகையில், மதுப் புட்டி ஒன்றுக்கு (180 மி.) ரூ.40 முதல் ரூ.70 வரை குறைவாக விற்பனை செய்யப்படுவதால், கடலூா் மாவட்ட மது பிரியா்கள் புதுச்சேரிக்கு படையெடுத்ததாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...