படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளப் பயிா்கள் சேதம் அமைச்சா் ஆய்வு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் அமெரிக்கன் படைப் புழுக்களின் தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.


கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் அமெரிக்கன் படைப் புழுக்களின் தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திட்டக்குடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது அமெரிக்கன் படைப் புழுக்கள் கடுமையாக தாக்கி வருகிறது. எனவே, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் டி.ஏந்தல் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று, பாதிப்படைந்த மக்காச்சோளப் பயிா்களை ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திட்டக்குடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். தற்போது மக்காச்சோளம் பயிா்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன. ஆனால், அமெரிக்கன் படைப் புழுக்களால் பயிா்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
அப்போது, திமுக ஒன்றிய செயலா் அமிா்தலிங்கம், திட்டக்குடி நகரச் செயலா் பரமகுரு, நகர இளைஞரணி அமைப்புச் செயலா் சேதுராமன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...