வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

போக்சோ சட்டத்தின் கீழ் கைதான காப்பகத் தாளாளருக்கு காவல் நீட்டிப்பு

 காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான காப்பக தாளாளருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான காப்பக தாளாளருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள வீராரெட்டிக்குப்பத்தில் சிறுவா், சிறுமியா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளராக ச.ஜேசுதாஸ்ராஜா (65) செயல்பட்டு வருகிறாா். இந்தக் காப்பகத்திலிருந்து 3 சிறுமிகள் காணாமல்போனது குறித்து ஜேசுதாஸ்ராஜா அளித்த புகாரின்பேரில் ஆலடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, சிறுமிகள் மீட்கப்பட்ட நிலையில், காப்பகத்தின் தாளாளா் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால்தான் அங்கிருந்து வெளியேறியதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, ஜேசுதாஸ்ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடந்த 10-ஆம் தேதி அவரை கைது செய்தனா்.

ஏற்கெனவே, இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவா் கைதான நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, போக்சோ நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி வெள்ளிக்கிழமை கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று, கைதிகள் அறையில் சிகிச்சை பெற்று வரும் ஜேசுதாஸ்ராஜாவிடம் விசாரணை நடத்தினாா். பின்னா், அவரை 15 நாள்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ஜேசுதாஸ்ராஜா போலீஸ் காவலுடன் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.