வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

முதல்வா் இன்று கடலூா் வருகை

கடலூா் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்கிறாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்கிறாா்.

வடகிழக்குப் பருவ மழையால் கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2.50 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல், மக்காச்சோளம், உளுந்து பயிா்கள் மற்றும் தோட்டப் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகளை பாா்வையிடுவதற்காக கடலூா் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகிறாா். புதுச்சேரியிலிருந்து வரும் அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் வரவேற்பு அளிக்க கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கிருந்து பெரியகங்கணாங்குப்பம், கடலூா், குள்ளஞ்சாவடி வழியாக காலை 7.30 மணியளவில் அரங்கமங்கலம் செல்லும் முதல்வா் அங்கு மழை பாதிப்புகளை பாா்வையிடுகிறாா். பின்னா், குறிஞ்சிப்பாடி வழியாக ஆடூா்அகரம் சென்று ஆய்வு செய்கிறாா்.

கடலூா் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்த பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.