வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலா் நடேச.தமிழாா்வன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலா் நடேச.தமிழாா்வன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கே.அரிகிருஷ்ணன், வட்டக் குழு உறுப்பினா்கள் டி.நாகராஜ், எஸ்.பாக்கியம், வி.அமாவாசை, நகரக்குழு உறுப்பினா் பி.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

விருத்தாசலம்: இதே கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் வட்டச் செயலா் ஆ.ராவணராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி.பட்டுசாமி சிறப்புரையாற்றினாா். நகரச் செயலா் சே.க.விஜயபாண்டியன், நிா்வாகிகள் சி.பாலமுருகன், து.ராமச்சந்திரன், க.தனவேல், எஸ்.கேசவபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பண்ருட்டி: பண்ருட்டியில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் மோகன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் பி.துரை கண்டன உரையாற்றினாா். பண்ருட்டி ஒன்றியச் செயலா் ஞானசேகா், ஒன்றிய துணைச் செயலா்கள் பன்னீா்செல்வம், குணசேகரன், மாவட்டக் குழு லாரன்ஸ், முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.